சாய்ந்தமருதின் முதுசம் சங்கீத வித்துவான் சங்கீதபூசணம் ஏ.எம்.ஏ அக்பர் தனது 84 வயதிலும் திடகாத்திரமாகவே உள்ளார்.



அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருதில் சங்கீதத்துறையை வளர்ப்பதில் பெரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய சங்கீத வித்துவான் சங்கீதபூசணம் ஏ.எம்.ஏ அக்பர் சங்கீதத்தை அழகாக இரசித்து தமிழை இரசனையோடு பாடுவதில் அவருக்கு நிகர் அவரே.
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் பங்குத் ஆசிரியராக கடமையாற்றிய காலம் அக் கல்லூரிக்கு பொன்னான காலமாகும்.
பாடசாலைகளுக்கிடையிலான சங்கீதப் போட்டி , அகில இலங்கை தமிழ் மொழித் தினம் போட்டிகளில் இக் கல்லூரி மாணவர்கள் தேசிய ரீதியில் சாதனை படைப்பதற்கு இம் மூத்த வித்துவான் முதன்மைக் காரணியாக அமைந்தார்.
இலங்கை வானொலி முஸ்லீம் சேவையில் இஸ்லாமிய கீதம் , இலங்கை வானொலி தமிழ் சேவையில் கர்நாடக சங்கீத கச்சேரி போன்றவற்றில் தனது திறமையை வெளிப்படுத்திய காலத்தை இன்றும் வானொலி நேயர்களால் மறக்க முடியாத நிகழ்வாகவுள்ளது.

முஸ்லீம் சேவையில் Supern Grade Artiste தமிழ் சேவையில் B Grade Artist என விளங்கியவர்.உன்னதமான இந்தக் கலைஞருக்கு தற்போது வயது 84
தனது துணைவியார் ஏ. பரிதா அம்மையார் ,நான்கு புதல்வர்கள்,ஏக புதல்வி அடங்கிய குடும்ப உறவினர்களுடன் கொழும்பில் இசைபட வாழ்ந்து வருகிறார்.
70 களின் ஆரம்பத்திலிருந்து இவரது இஸ்லாமிய கீதங்களை , தமிழிசைக் கச்சேரிகளை கேட்டு மகிழ்ந்து வந்த இவரது இரசிகர்கள் நெஞ்சில் நிறைந்த பாடகர் கலாபூஷணம் ஏ எம்.ஏ.அக்பரின் பாடல்கள் மீண்டும் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்படாதா என் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் திரைப்பட நடிகராகவும் புகழ் பெற்றிருந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக தலைவர் சங்கீத சாஹித்ய சிரோமணி எம்,எம்.தண்டபாணி தேசிகர் அவர்களை குருவாகக் கொண்டு( 1960-1964 ) முறைப்படி சங்கீதம் பயின்று சங்கீத பூஷணம் பட்டம் பெற்றவர்.

யாழ்ப்பாணம் , பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் சங்கீத ஆசிரியராக பயிற்றுவிக்கப்பட்டவர்.
களுத்துறை முஸ்லீம் மத்திய கல்லூரி,கம்பளை ஸாஹிரா கல்லூரி, நிந்தவூர் அல் அஸ்றக் தேசிய பாடசாலை, கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி ,பாணந்துறை அல் ஜீலான் மத்திய கல்லுரி என்பவற்றில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
திருமதி.கௌரீஸ்வரி ராஜப்பன் அவர்களின் GLOBAL ACADEMY யில் இசை விரிவுரையாளராக பணியாற்றியவர்.
யாழ்ப்பாணம் வீரமணி ஜயர் இயற்றி, கலாபூஷணம் அக்பர் அவர்கள் தமது இனிய குரலில் இசைத்த இஸ்லாமிய கீதம் இன்றும் அவரின் சங்கீத புலமையை நினைவு படுத்திக் கொண்டே இருக்கின்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :