தேர்தலுக்காகவே பிரிந்து நிற்கின்றோம் ! 7 சபைகளிலும் போட்டியிடுகின்றோம்!



அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கூறுகிறார்.
காரைதீவு சகா-
தேர்தலுக்காகவே நாம் தற்காலிகமாக பிரிந்து நிற்கின்றோம். அம்பாறை மாவட்டத்திலே தமிழரசுக் கட்சி சார்பில் ஏழு சபைகளில் போட்டியிடுகின்றோம்.
இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

அம்பாறை கச்சேரியில் நேற்று சனிக்கிழமை உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்துவிட்டு வரும் போது கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கொட்டும் மழையில்
அவருடன் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலும் கருத்து தெரிவித்தார்.

கலையரசன் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்..
நாம் திருக்கோவில் ஆலையடிவேம்பு காரைதீவு சம்மாந்துறை பொத்துவில் நாவிதன்வெளி ஆகிய ஆறு சபைகளிலே நாங்கள் போட்டியிடுகின்றோம்.கல்முனை மாநகர சபைக்கு பின்னர் போட்டியிடுவோம்.
மக்களின் தெரிவின்படி பெற்ற வேட்பாளர்களை வைத்து இந்த போட்டியிலேயே நாங்கள் போட்டியிடுகின்றோம். நிச்சயமாக ஜனநாயகம் முறைப்படி மக்கள் எமக்குரிய ஆணையை தருவார்கள் என்பதிலே 100 வீத நம்பிக்கை இருக்கின்றது . தமிழ் தேசியக் கூட்டமைப்பான எமது பிரிவு தற்காலிகமானது. தேர்தலிலுக்காகவே நாங்கள் பிரிந்தோம். பிற்பாடு அனைவரும் இணைந்து செயல்படுவதற்கு நூறு வீதம் தயாராக இருக்கின்றோம். என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :