5லட்சரூபா பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் தமிழ் முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கிவைப்பு.



நாடு பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட நிலையில், கல்முனை றொட்டரிக் கழகம் கஷ்டப்பிரதேச தமிழ் முஸ்லிம் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக கற்றல் உபகரணங்களை வழங்கி வருகின்றது.

கழக வேலைத்திட்டத்தின் 5 ம் கட்ட நிகழ்வாக பொத்துவில் பிரதேசத்திலுள்ள ஐந்து பாடசாலைகளுக்கு 387560/- ரூபா பெறுமதியான அப்பியாசக்கொப்பிகள் நேற்று முன்தினம் வழங்கி வைக்கப்பட்டன.

கழகத்தின் தலைவர் ரோட்டரியன் வி.விஜயசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பொதுச்செயலாளர் றோட்டரியன் மு.சிவபாதசுந்தரம் முன்னாள் தலைவர் றோட்டரியன் எஸ். புஷ்பராஜா உறுப்பினர் றோட்டரியன் நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பொத்துவில் சரஸ்வதி வித்தியாலயம்,ஊறணி வித்தியாலயம்,
றொட்டை அ.த.க.பாடசாலை ,பொத்துவில் விபுலானந்த வித்தியாலயம் ,
செங்காமம் அல்மினார் வித்தியாலயம் , மணற்சேனை அ.த.க.பாடசாலை0போன்ற பாடசாலை மாணவர்களுக்கு இவ்வுதவிகள் வழங்கப்பட்டன.

நெருக்கடி மிகுந்த இன்றைய சூழலில் இவ் உதவி மாணவர்களுக்கு பெரும் வரப்பிரசாதம் என்று குறித்த பாடசாலை அதிபர்கள் நன்றி தெரிவித்தனர்.
இதேவேளை, ஏலவே கல்முனை ரோட்டரி கழகம் கோரக்கர் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு ஆயிரம் அப்பியாச கொப்பிகளை வழங்கி வைத்தது . அதிபர் எஸ்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற
நிகழ்வில் கல்முனை ரோட்டரி கழகத்தின் புதிய தலைவர் றோட்டரியன் விஜயரெத்தினம் விஜயசாந்தன் , சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, ரோட்டரி கழக முன்னாள் தலைவர் றோட்டரியன் எஸ். புஷ்பராஜா ,பொதுச் செயலாளர் றோட்டரியன் எம் சிவபாதசுந்தரம், உறுப்பினர் றோட்டரியன் நாசர் ஆகியோருடன் கோரக்கர் ஆலய உப தலைவரும் ,பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளருமான வி.மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆயிரம் அப்பியாச கொப்பிகள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :