நியாஸ் மௌலவி பவுண்டேசனின் நற்பணி மன்றமும் பீர்சாகிப் ஜூம்ஆப் பள்ளிவாசலும் இணைந்து தற்போதைய பொருளாதார பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ள மூவினத்தையும் சேர்ந்த ஏழை மாணவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வருகின்றது.
இந்த வகையில் 2023 புதுவருடத்தை முன்னிட்டு புதுவருட தினத்தில் கொழும்பு 12 நியாஸ் மௌலவி பவுண்டேசனில் வைத்து மூவினத்தையும் சேர்ந்த சுமார் 490 மாணவர்களுக்கு பாடசாலைப் பைகள், அப்பியாச கொப்பிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
பவுண்டேசனின் பணிப்பாளர் மௌலவி எல்.எம்.லமீர் காபிஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கொழும்பு மாநகர சபையின் பிரதிமேயர் எம்.ஐ. இக்பால், மற்றும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் ஒமர் காமில், அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் தலைவர் எம்.ஆர்.எம்.சறூக், கெசல்வத்த பொலிஸ் நிலையத்தின் உயர் பொலிஸ் அதிகாரி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

0 comments :
Post a Comment