ஓட்டமாவடி 1987 @ OCC அமைப்பின் கௌரவிப்பு நிகழ்வு



எச்.எம்.எம்.பர்ஸான்-
ட்டமாவடி தேசிய பாடசாலையின் 1987 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தர பழைய மாணவர் (1987 @ OCC) அமைப்பின் கௌரவிப்பு நிகழ்வு சனிக்கிழமை (7) காவத்தமுனை திருமண மண்டபத்தில் இடம்பெற்றது.

அமைப்பின் தலைவரும் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் பிரதி அதிபருமான ஏ.எல்.இப்றாகீம் தலைமையில் இந்நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இதில், க.பொ.த.சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்களின் பிள்ளைகள் பாராட்டி, நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன், பழைய மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வின் போது, ஒன்றாய் கற்று மரணித்த நண்பர்களுக்கும் மற்றும் மரணமடைந்த ஆசிரியர்களுக்காகவும் வேண்டி பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
கற்பித்த ஆசிரியர்களுக்கு பூ மாலை அணிவித்து, இஸ்லாமிய பாரம்பரிய நிகழ்வான கோலாட்டத்துடன் நிகழ்வுகள் நடைபெற்ற இடத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்நிகழ்வில், அதிதிகளாக, கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ரி.எம்.றிஸ்வி மஜீதி, ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எம்.ஏ.காதர், ஏ.எல்.மீராசாகிபு, ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.அஸ்ரப், ஓய்வு பெற்ற அதிபர்களான எம்.சீ.எச். முகம்மத், ஏ.எல்.நைனா முகம்மத், எம்.எஸ்.சுபைதீன், எம்.சஹீட், ஓட்டமாவடி தேசிய பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் உட்பட ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், ஆசிரியைகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :