இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மலேசியாவின் தூதுக் குழு ஒன்று இன்று கொழும்பு 02இல் உள்ள வேக்கந்தை ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு நல்லிணக்க விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
பள்ளிவாசலின் நிருவாகத் தலைவர் பஸீர் லத்தீப் வரவேற்றார். இக்குழுவில் மலேசியாவின் மலாக்கா ஆளுநர் கலாநிதி மொஹமட் அலிபின் மொஹமட் ருஸ்டம், மலாக்கா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி அப்துல் ரஸாக்பின் இப்ராஹிம், இலங்கைக்கான மலேசியத் தூதுவராலயத்தின் கவுன்சிலர் மொஹமட் டுமிங், மலாய் சங்கத்தின் இலங்கைத் தலைவர் கலாநிதி அன்வர் உலுமுடீன் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த ஆளுநர் கலாநிதி மொஹமட் அலிபின் மொஹமட் ருஸ்டம், இப்பள்ளிவாசலின் அபிவிருத்திப் பணிகளுக்கும் ஏழை மாணவர்களின் கல்விக்கும் உதவி செய்வதுடன் தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு முதற்கட்டமாக உலர் உணவு வழங்குவதற்கு ஒரு தொகுதி பணத் தொகையையும் வழங்கி வைத்தார். வரவேற்றுபுரையை கலாநிதி வஸீர் எம் லத்தீப் வழங்கினார்.
0 comments :
Post a Comment