நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.பி. நவாஸ் , ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும், கல்முனை மாநகர பிரதிமுதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளருமான ரஹ்மத் மன்சூர் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கு அமைவாக நிர்மாணிக்கப்பட்ட சவளக்கடை, தாருல் ஹிக்மா கலாபீடத்திற்கான குடிநீர் ,வுழு செய்வதற்கான நீர்த்தொகுதி மற்றும் பொதுக்கிணறு என்பவற்றை ரஹ்மத் மன்சூர் அவர்கள் பாவனைக்காக அண்மையில் கையளித்து வைத்தார்.
இதன்போது, கலாபீடத்தில் இருக்ககூடிய குறைநிறைகளை அறிந்துகொண்டதோடு எதிர்காலங்களில் தன்னால் இயலுமான உதவிகளைச் செய்யவிருப்பதாகவும் இந்நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்த Y.W.M.A பேரவைக்கும் தனது விஷேட நன்றிகளையும் இதன்போது ரஹ்மத் மன்சூர் தெரிவுத்துக்கொண்டார்.
0 comments :
Post a Comment