தமிழ் நாட்டில் இருந்து வருகை தந்திருக்கின்ற உலகப் புகழ்பெற்ற ஓவியர் மு.பத்மவாசன் நேற்று காரைதீவில் அறநெறி மாணவர்களுக்கு ஆன்மீக ஓவியப் பயிற்சி பட்டறையை நடாத்தினார்.
இந்நிகழ்வு காரைதீவு விபுலானந்தா மணிமண்டபத்தில் நடைபெற்றது.
பிரதம அதிதியாகவும் பிரதான வளவாளராகவும் வருகை தந்த ஓவியர் பத்மவாசன் அவர்களை விபுலானந்தா ஞாபகார்த்த பணிமன்றத்தின் முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா அறநெறி ஆசிரியர்கள் சகிதம் வரவேற்றார்.
அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு உலகப்புகழ் பெற்ற ஓவியர் மு.பத்மவாசன் விசேட கருத்தரங்கையும், ஓவியத்தினுாடாக இறைவனை காணலாம், நாவலர் பெருமான் - வாழ்வும் வாக்கும், சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை சரித்திரம் போன்ற விடயங்களை உள்ளடக்கிய வகையில்
ஓவியம் வரைதல் நிகழ்வூடாகவும் மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினார்.
அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் கே.ஜெயராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி சிவலோஜினி ஆலையடிவேம்பு பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் திருமதி சர்மிளா மற்றும் அறநெறி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் ந.பிரதாப் நிகழ்வைத் தொகுத்தளித்தார்.
0 comments :
Post a Comment