விசேட கராத்தே பயிற்சியும், ஆரம்ப தரங்களில் உள்ள மாணவர்களுக்கான தரப்படுத்தல் பரீட்சையும் கடந்த சனிக்கிழமை சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய உள்ளக அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சர்வதேச மாஸியல் ஆட் சம்மேளனத்தின் பிரதம போதனாசிரியரும், தென் கிழக்கு பல்கலைக்கழக கராத்தே பொறுப்பாளருமான முஹம்மது இக்பால் அவர்களுக்கு கராத்தே துறையில் அவர் ஆற்றிவரும் மகத்தான சேவையை பாராட்டி
ஓட்டமாவடியிலிருந்து கலந்துகொண்ட கராத்தே மாணவர்களின் பெற்றார்கள் சார்பாக நினைவுச்சின்னம் ஒன்றினை வழங்கி வைத்தனர்.
இப் பயிற்சி முகாமில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலுமிருந்து கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment