கண்டி க/சரஸ்வதி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.



நூருள் ஹுதா உமர்-
ணைந்த கரங்கள் அமைப்பினால் க/சரஸ்வதி மத்திய கல்லூரி பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது பாடசாலையின் பிரதி அதிபர் கணேசன் லோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

கண்டி மாவட்டம் கம்பளை கல்வி வலயத்தில் உள்ள க/சரஸ்வதி மத்திய கல்லூரி மாணவர்கள் அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும் பாடசாலைக்கு வருகை தருபவர்களாக காணப்படுவதுடன் இக் கிராமத்தில் உள்ள மக்களின் பிரதான தொழிலான தோட்டத் தொழிலையே நாளாந்தம் நம்பி இந்த மாணவர்களை பாடசாலைக்கு பெற்றோர்கள் அனுப்புகின்றனர்.

இணைந்த கரங்கள் இப்பணியினை இடை விடாது அவர்களது பயணத்தின் நோக்கத்தையும் மாணவச் செல்வங்களின் வலியையும் உணர்ந்து "ஏழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்" எனும் மகுடம் வாசகத்தினை சுமந்து செல்கின்றது.
இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களும் இணைந்து உதவி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்பாடசாலையில் உயர்தர விஞ்ஞான பாடத்திற்கான ஆசிரியர்கள் பற்றாக்குறையினால் கண்டி பிரதேசத்தில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்து பிரத்தியோக வகுப்புக்களை பாடசாலையில் நடாத்துகின்றனர். மேலும் மாணவர்களுக்கு போதிய தளபாட வசதிகள் இல்லாத காரணத்தினால் ஒருவர் அமரும் ஆசனத்தில் இருவர் அமர்ந்து கொண்டும் தரையில் இருந்து கொண்டும் தனது வகுப்பைறையில் கல்வியினை கற்கின்றனர்.

மேலும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் இன் நிகழ்வில் பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர் திருஞானம், பாடசாலையின் பகுதி தலைவர்களான ஏம்.தவமலர், ஆர். ஜெயகாந்தி, பேராதனை தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரியைகளான தவராசா பரணிதா, வெ.சானுஜா, கி.மிதுளா, வி.கஜந்தரி, செ.தர்ஷிகா, சி.லக்சனா, ரா.திவ்விகா மற்றும் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள்,இணைந்த கரங்கள் உறுப்பினர்களான லோ. கஜரூபன், எஸ்.காந்தன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இணைந்த கரங்கள் அமைப்பினரால் க/சரஸ்வதி மத்திய கல்லூரி பாடசாலையில் தரம் 01 தொடக்கம் தரம் 11 வரை கல்விகற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இணைந்த கரங்கள் உறவுகளினால் இன்றைய தினம் இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான லோ. கஜரூபன், எஸ். காந்தன் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :