கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்திய தமிழ் இலக்கிய விழாவில் ஓட்டமாவடி பிரதேச செயலாளரும் எழுத்தாளருமான வீ.தவராஜாவுக்கு பல்துறை வித்தகர் விருது வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தமிழ் இலக்கிய விழா 2021ல் இவருக்கான பல்துறை வித்தகர் விருது வழங்குவதற்காக தெரிவு செய்து கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகளினால்; ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் வைத்து பல்துறை வித்தகர் என்ற விருதினை வழங்கி வைத்தனர்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பண்பாட்டடலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி. எஸ்.சரண்யா மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டடலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்களான திரு.குணபாலா மற்றும் திரு.கோணேஸ் ஆகியோர் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் வைத்து பல்துறை வித்தகருக்கான விருதையும் சான்றிதழையும் ஓட்டமாவடி பிரதேச செயலாளரும் எழுத்தாளருமான வீ.தவராஜாவுக்கு வழங்கிவைத்தனர்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளரும் எழுத்தாளருமான வீ.தவராஜா இது வரை கவிதை, ஆய்வுக்கட்டுரை, நாடகம், சிறுகதை போன்ற நூல்களை எழுதியுள்ளதுடன் அதற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண பண்பாட்டடலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் தனது அலுவலகம் வந்து விருதுனை வழங்கியமைக்கும் இந்த விருது தனக்கு கிடைப்பதில் கால் கோளிட்டு நேர்மையாகவும் நியாயமாகவும் செயற்ப்பட்ட முன்னாள் பணிப்பாளர் ச.நவநீதனுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளரும் எழுத்தாளருமான வீ.தவராஜா தெரவித்தார்.
0 comments :
Post a Comment