ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிரசவித்த ஹட்டன் தாய்க்கு ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் ஊடாக தியாகி அறக்கொடை நிதியம் நிதியுதவி..உமர் அறபாத் -
ரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகளை பிரசவித்துள்ளதுள்ள அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவின் ஹட்டன்- மஸ்கெலியா புரன்வீன் ராணி தோட்டதைச்சேர்ந்த 31 வயதான கிருஷ்ணகுமார் பாக்கியலட்சுமி என்ற இளம் தம்பதியினரின் குடும்ப நிலைமையைக் கருத்திற்கொண்டு குழந்தைகளுக்கான பராமரிப்பு நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

பாக்கியலட்சுமி, கிருஷ்ணகுமார் தம்பதியினர் அன்றாடம் தோட்ட வேலைகளில் ஈடுபட்டு தமது ஜீபனோபாயத்தினை நடத்தி வந்த நிலையில், இவ்வாறு மூன்று பெண் குழந்தைகளை இம்மாதம் 01ம் திகதி நுவரெலிய மாவட்ட வைத்தியசாலையில் பாக்கியலட்சுமி பிரசவித்துள்ளதுள்ளார்.

பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தோட்ட வேலைகளில் ஈடுபட்டு தமது வாழ்க்கையை நடத்தி வரும் இக்குடும்பத்தின் நிலைமை குறித்து அறிந்து கொண்ட தியாகி அறக்கொடை நிதியத்தின் இஸ்தாபகத் தலைவரும் சமூகச் செயற்பாட்டாளருமான "சமூக ஜோதி" வாமதேவன் தியாகேந்திரன் வழங்கிய ஒரு இலட்சம் முதற்கட்ட நிதியுதவியினை இக்குழந்தைகளின் பராமரிப்புக்காக கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளர் ஊடகவியலாளரும் தியாகி அறக்கொடை நிதியத்தின் இணைப்பாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் நேற்று (23) குறித்த தம்பதியினரின் இல்லத்திற்குச் சென்று வழங்கி வைத்தார்.

தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் சமூக ஜோதி வாமதேவன் தியாகேந்திரன் நாடளாவிய ரீதியில் இன, மத வேறுபாடின்றி பல்வேறு மனிதாபிமானப் பணிகளை தனது சொந்த நிதியின் மூலம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :