இன்று காரைதீவில் நவீனமயப்படுத்தப்பட்ட இலங்கை வங்கி கிளை திறந்துவைப்பு!


வி.ரி. சகாதேவராஜா-
காரைதீவில் நவீன மயப்படுத்தப்பட்ட இலங்கை வங்கி கிளை புதிய கட்டிடத்தில் இன்று(4) வெள்ளிக்கிழமை வங்கி முகாமையாளர் திருமதி யாழினி மோகனகாந்த் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

விழாவில் பிரதம அதிதியாக இலங்கை வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் சில்வா கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு அதிதியாக வங்கியின் கிழக்கு மாகாணத்திற்கான உதவி பொது முகாமையாளர் சிந்தியா மார்ட்டின் கௌரவ அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெககராஜனும் முன்னாள் உதவி பொது முகாமையாளர் வணிகசேகரவும் கலந்து கொண்டார்கள்.
காரைதீவின் முக்கிய பிரமுகர்கள் வங்கி முகாமையாளர்கள் கலந்து கொண்ட நிகழ்வின் ஆரம்பத்தில் பான்டா வாத்தியம் சகிதம் வரவேற்கப்பட்டு தேசிய மாகாண வங்கி கொடிகள் ஏற்றப்பட்டன. பின்னர் நாடா வெட்டி அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டது.

அங்கு உதவி பொதுமுகாமையாளர் சிந்தியா மார்ட்டின் வரவேற்புரை நிகழ்த்த பிரதான உரையை பிரதி பொது முகாமையாளர் பியல் செல்வா நிகழ்த்தினார்.
அங்கு புதிய கொடுக்கல் வாங்கல்கள் சம்பபிரதாயபூர்வமாக நிகழ்த்தி வைக்கப்பட்டது. மேலும் 18 பிளஸ் அதிஷ்ட சாலிக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. கட்டிட உரிமையாளர்க்கு கௌரவ பரிசு வழங்கி வைக்கப்பட்டது.

இறுதியாக அம்பாறை மாவட்ட இலங்கை வங்கி முகாமையாளர் குமுதினி நன்றியுரையாற்றினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :