அமெரிக்கத் தூதுவர் அமைச்சர் ஹாபிஸ் நசீருடன் பேச்சுஏறாவூர் சாதிக் அகமட்-
லங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலிசங்குடன் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம்  (16) புதன்கிழமை இடம்பெற்ற இச்சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்தது. இதில், இருதரப்பு இணக்கப்பாடுகள் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.

சுற்றாடல் சார்பான திட்டங்களை அமுல்படுத்துவதற்காக அமெரிக்காவின் ஒத்துழைப்பை வலியறுத்திய அமைச்சர், காலநிலையை பாதுகாக்கும் சதுப்பு நிலத்திட்டங்கள் குறித்தும், அமெரிக்க தூதுவரின் அவதானத்துக்கு கொண்டு வந்தார்.
மேலும்,சுற்றாடல் அமைச்சின் செயற்பாடுகளை ஆக்கத்திறனுள்ளதாக்கும் பொருட்டு, அமைச்சின் கட்டடங்களை உச்ச தரத்தில் நிர்மாணிப்பது பற்றியும் இவ்விருவரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

மேலும்,எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாநாடு இன்னும் இந்தோனேஷியாவின் பாலித் தீவில் நடைபெறும் ஜி 20 மாநாடுகளின் தீர்மானங்களிலும் கவனம் செலுத்தப்பட்டது. பொதுவாக உணவுப் பஞ்சம் குறித்து எச்சரிக்கப்படுவதால் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்தங்களிலும் இச்சந்திப்பு கவனம் செலுத்தியது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :