கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்! போலீசார் தலையீடு; பிரதிநிதிகள் விளக்கம்!



வி.ரி. சகாதேவராஜா-
ம்பாறை மாவட்ட கஞ்சி குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் எதிர்வரும் மாவீரர் தினத்தை ஒட்டி இன்று(18) வெள்ளிக்கிழமை சிரமதானம் செய்து துப்புரவாக்கப்பட்டது.
இதன் போது முன்னாள் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், தவிசாளர்கள் உள்ளிட்ட குழுவினர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். மாவீரர் பணிக்குழுவினரும், பொதுமக்களும் வந்திருந்தனர்.

அப்போது அங்கு திருக்கோவில் போலீசார் ஸ்தலத்திற்கு விரைந்து இந்த காணி சிரமதானம் காரணமாக ஏதாவது இனப் பிரச்சினை எழுந்தால்? என்று கேள்வி கேட்ட பொழுது "இது எமது மண்ணுக்காக உயிர் நீத்த உறவுகளை நினைவு கூருகின்ற நிகழ்வு. இது எமது உரிமை.இதில் எந்த இனப்பிரச்சினையும் வரப்போவதில்லை" என்று மக்கள் பிரதிநிதிகள் கூறியதையடுத்து அவர்கள் அங்கிருந்து அகன்று சென்றனர்.

இதில் கலந்து கொண்ட இலங்கை தமிழர் கட்சி கட்சியின் பிரதிநிதியும் காரைதீவு பிரதேச சபை தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் கூறுகையில்..
எதிர்வரும் கார்த்திகை மாதம் 27 ஆம் தேதி மாலை 6 .05 மணியளவில் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அனைவரும் வருகை தந்து நமது நினைவேந்தல்களை அச்சமின்றி இங்கு மேற்கொள்ள முடியும். நாங்கள் அனைவரும் வருவோம். தமிழ் இனத்திற்கும் மண்ணிற்குமாக உயிர் நீத்த உறவுகளின் பெற்றோர் உறவினர்கள் அனைவரும் வாருங்கள். என்று கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :