தேசியமட்டத்தில் களுதாவளை மாணவி சனாதனி சாதனை.வி.ரி. சகாதேவராஜா-
கில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியில் குறுநாடக ஆக்கம் பிரிவு -4 இல் களுதாவளை மகாவித்தியாலய மாணவி செல்வி.உதயகுமார் சனாதனி முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இப் போட்டி கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
பட்டிருப்பு வலய ஆசிரிய ஆலோசகர் திருமதி வனிதா சுரேஷ் கூறுகையில்...
பட்டிருப்பு வலயத்தில் நாடகமும் அரங்கியலும் பாடம் புதியதொரு சாதனை படைத்துள்ளது . நேற்று இடம் பெற்ற தேசிய மட்ட தமிழ் மொழி தின போட்டியில் குறுநாடக ஆக்கம் பிரிவு 4ல் மட்/பட்/களுதாவளை ம.வி(தே.பா) யைப் சேர்ந்த உதயகுமார் -சநாதனி
1ம் இடம் பெற்று பாடசாலைக்கும் வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.அவரை பட்டிருப்பு வலய நாடகமும் அரங்கியலும் பாடம் சார்பாக வாழ்த்துவதில் பெருமை கொள்கின்றேன்.
உதயகுமார்-சறோஜாதேவி இருவரும் நாடகமும் அரங்கியலும் கற்பிக்கும் ஆசிரியர்கள். அவர்களுக்கும் வாழ்த்துக்கள். என்றார்.

ஊக்குவித்த அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பெற்றோர் அனைவருக்கும் பழைய மாணவர் சங்கம் களுதாவளை சார்பில் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் என்றும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :