விசேட தேவையுடையவர்களை சமூக சேவைகள் திணைக்களத்தின் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைஹஸ்பர்-
விசேட தேவையுடையவர்களை சமூக சேவைகள் திணைக்களத்தின் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை இன்று(22) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

விசேட தேவையுடையவர்கள் தொழில் பயிற்சிக்கான நேர்முகப்பரீட்சைக்கு வருகை தந்தமை பாராட்டக்கூடிய விடயமாகும். அத்துடன் இவ்வாறானதொரு வாய்ப்பை விசேட தேவையுடையவர்களுக்கு சமூக சேவைகள் திணைக்களம் ஏற்படுத்திக்கொடுத்தமை வரவேற்கத்தக்கது. கிடைக்கப்பெற்ற வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பான பயிற்சியை பெற்றுக்கொண்டு தொழில் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டுவதாக இதன்போது மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தெரிவித்தார்.

விசேட தேவையுடையவர்களுக்கு பெற்றோர் அன்பு மற்றும் அரவணைப்பை மாத்திரம் வழங்கினால் போதுமானதாக அமையாது. அவர்களது திறன்களை இனங்கண்டு அதற்கான வாய்ப்புக்களை வழங்க ஆர்வம் காட்டல் வேண்டும். அதன்போது அவர்களது திறன்களை விருத்தி செய்து வாழ்க்கையில் முன்னோக்கி செல்ல வழிசமைக்க ஏதுவாக அமையும். 18-35 வயதுக்குட்பட்டவர்களே பயிற்சிக்காக தெரிவு செய்யப்படுவார்கள். கணனி, மையல், மின்னியல் சார் பாடநெறிகள் இவர்களுக்காக போதிக்கப்படுவதுடன் வரலாற்றில் முதல் தடவையாக தமிழ் மொழியில் இப்பாடநெறிகள் கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு ஆகிய பயிற்சி மையங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதனை சரியாக பயன்படுத்துமாறும் பயிற்சிக்காக தெரிவு செய்யப்படுபவர்களுக்கு உணவு, தங்குமிடம், இலவச சீருடை உட்பட நாளொன்றுக்கான கொடுப்பனவாக 150 ரூபாவும் வழங்கப்படும்.
மேலும் பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு NVQ சான்றிதழும் தொழிலை மேற்கொள்வதற்கான உபகரத்தொகுதிகளும், நிதி உணவியும் வழங்கப்படவுள்ளதாக இதன்போது சமூக சேவைகள் திணைக்களத்தின் வத்தேகம தொழில் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி டபிள்யூ.டபிள்யூ.ராஜபக்ச தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சமூக சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு தொழிற்பயிற்சி நிலையப்பொறுப்பதிகாரி ஜே.சுகந்தினி, திருகோணமலை மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் டி.பிரணவன், சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :