இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் நாளாந்தம் வெளியிடும் வானிலை அறிக்கை தனியே சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மட்டுமே வெளிவருகின்றது .
தமிழில் இவ் அறிக்கை வெளியாவது இல்லை. இது ஏன் என தமிழ் பேசும் மக்கள் பலத்த விசனத்துடன் கேள்வி எழுப்புகின்றனர் என்று காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் விசனம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்...
இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் இல்லையா? அவர்களுக்கு வளியினால் வரக்கூடிய அனர்த்தங்கள் தாக்க மாட்டாதா ?
அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் இதனைக் கவனத்தில் கொள்வதில்லையா? என்றெல்லாம் அவர்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.
மனித உயிர்களை பாதுகாக்கும் அனர்த்த முகாமைத்துவ முன்னாயத்த அறிவிப்பிலும் பாரபட்சம் காட்டப்படுகின்றதா?
அவசியமான அவசர அனர்த்த முகாமைத்துவ முன்னாயத்த அறிவிப்புகள் அவரவர் பாஷையில் வெளியிடப்பட்டாலன்றி அவற்றால் பிரயோசனமில்லை என்று கூறப்படுகிறது.
தமிழ் பேசும் மக்கள் கூடுதலாக உள்ள சில மாவட்டங்களில் அனர்த்த முகாமைத்துவ முன்னாயத்த அறிவிப்புகள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
இனிமேலாவது வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் தமிழிலும் இந்த அறிக்கைகளை வெளியிட வேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
0 comments :
Post a Comment