கனேடிய தமிழ் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பஞ்சலிங்கம் கந்தையா மற்றும் நீதி அமைச்சா் கலாநிதி விஜயதாச ராஜபக்ச இடையே விசேட சந்திப்பு!
அஷ்ரப் ஏ சமத்-
லங்கையிலிருந்து புலம்பெயா்ந்து கனடாவில் வாழும் கனேடிய தமிழ் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பஞ்சலிங்கம் கந்தையா நேற்று 16 புதன்கிழமை நீதி அமைச்சா் கலாநிதி விஜயதாச ராஜபக்சவினை நீதியமைச்சில் வைத்து சந்தித்தாா். அவா் வட கிழக்கு மக்களுக்குச் செய்ய வேண்டிய கருமங்கள்,செயற்பாடுகள், பற்றிய கடிதமொன்றையும் ஒரு நாடான இலங்கைக்குள் சகல மக்களுககுமான தேசிய ஒற்றுமையில் பல திட்டங்கள் கொண்ட கனேடிய தமிழ் காங்கிரஸ் கட்சியினால் தயாரித்து அங்கு செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய நுால் ஒன்றையும் அமைச்சரிடம் கையளித்தாா்.

கந்தையா அங்கு ஊடகவியலாளா் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் -

கனேடியத் தமிழ் காங்கிரஸ் கட்சியினை இலங்கையில் தடையை நீக்கியமைக்கும் . சில அரசியல் கைதிகளை விடுதலை செய்தமைக்கும் நீதியமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தாா்.
அத்துடன் எதிா்காலத்தில் வடக்கு கிழக்கு என்று இல்லாமல் தெற்கில் தேசிய ஒற்றுமையை புலம்பெயா்ந்த தமிழா்கள் கட்டியெழுப்புதல், வடக்கில் உள்ள பலாலி விமான நிலையம்,காங்கேசன்துறை துறைமுகம், மற்றும் தொழிற்சாலைகள் மன்னாா் இந்தியா கடல் வழிப்பாதைகள் , வடக்கு கிழக்கு மக்களது வாழ்வதாரம் காணிகள் விடுவிக்கப்படல், காணமல் போனோா்களுக்கான பற்றிய நிவாரணத் திடடம் என்பன பல்வேறு திட்டங்களை அமைச்சரிடம் முன் வைத்துள்ளதாக . கந்தையா தெரிவித்தாா்.

1983ல் நாட்டில் நடைபெற்ற கலவரங்களினால் அனேகமான தமிழ் மக்கள் உலக நாடுகள் முழுவதிலும் இடம் பெயா்ந்து வாழ்கின்றாா்கள். அதில் நானும் கரவெட்டியிலிருந்து இடம்பெயா்ந்து கனடாவில் டொரோன்டோவில் வாழ்பவன். தற்பொழுது நாங்கள் எமது தாய் நாட்டை வந்தடைந்துள்ளோம். சில செயற்பாடுகளை தமிழ் மக்களுக்கு செய்யும் படியும் அரசினை வலியுறுத்தி வருகின்றோம். எனவும் கந்தையா தெரிவித்தாா்.

இங்கு கருத்துத் தெரிவித்த நீதியமைச்சா் விஜயதாச ராஜபக்ச. கருத்து தெரிவிக்கையில் -

வடக்கில் 95 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மிகுதியாக 5 வீதமே மட்டுமே உள்ளது. அதனை நீதியமைச்சின் செயலாளா் தலைமையில் பாதுகாப்புப் படையுடனருடனும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடனும் ஆராய்ந்து வருகின்றோம். அத்துடன் முன்னாள் விடுதலைப்புலிகள் ஏற்கவே விடுவிக்கப்பட்டுள்ளனா். அதனைவிட அரசியல் கைதிகள் 31 பேர் சிறையில் இருந்தனா். அவா்களுள் ஒரு சிலரை விடுதலை செய்துள்ளோம். மிகுதியானவா்களை விடுதலைக்காக சில வழக்கு விசாரனைகள் உள்ளன. அவைகள் பற்றி ஆராய்ந்து வருகின்றோம். அத்துடன் காணாமல் போனோா் 2000 விண்ணப்பங்கள் காணாமல் போனோா் அலுவலகத்திற்கு கடந்த 4 மாதங்களுக்குள் கிடைக்கப் பெற்று உள்ளன. அவைகள் அடுத்த ஒரு சில மாதங்களுக்குள் அவை பற்றி செயலாளா் மட்டத்தில் பரிசீலனை செய்து உரிய நிவாரணங்கள். சான்றிதழ்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அத்துடன் இந்தியாவில் இருந்து வந்த 11800 பேர்களது பிறப்பு ,அடையால அட்டை போன்ற சான்றிதழ்கள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
இலங்கை தமிழ் டயஸ்போர உறுப்பினர்கள் இலங்கையில் வந்து முதலிடவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கும் ஜனாதிபதி மட்டத்தில் கோரிக்கை விடுத்து வருகின்றோம். வடக்கில் வாழ்வதாரங்களுக்கு உதவும் படியும் கோரிக்கைவிடுக்கின்றோம் எனவும் நீதியமைச்சா் தெரிவித்தாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :