வாழைச்சேனை ஆயிஷாவில் பசி அகற்றும் வேலைத்திட்டம்எச்.எம்.எம்.பர்ஸான்-
வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவிகளின் நலன் கருதி பாடசாலையில் உணவுப் பெட்டகம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில், றிஷிலைன்ஸ் பவுன்டேசனின் அனுசரணையில் இந்நிகழ்வு பாடசாலை அதிபர் என்.சஹாப்தீன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்றது.

அங்கு ஒரு உணவுப் பெட்டகம் வைக்கப்பட்டுள்ளதுடன், அதில் மாணவிகளின் பசி நீக்க உணவுப் பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன.

அதில், தேவையான மாணவிகள் எடுத்துக் கொள்ளவும், இயலுமான மாணவிகள் வைத்துச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இத் திட்டத்தை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வில் அதிதிகளாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.றமீஸா, பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நஸீர், பாடசாலை பிரதி அதிபர் ஏ.ஆர்.முகைதீன் பாவா, பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.ஐ.எம்.பஸீல், உறுப்பினர் இம்தியாஸ், பகுதித் தலைவர் கே.ஆர்.எம்.இர்ஷாத், இளைஞர் சேவை பயிலுனர் ஏ.எஸ்.ஹாரிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :