HDA - SL அமைப்பினால் சாய்ந்தமருதில் விழிப்புணர்வு நிகழ்வு!




"தின்மக்கழிவு மேலாண்மை, சுகாதார மேலாண்மை, கலாச்சார அடிப்படையிலான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள்" சம்மந்தமான விழிப்புணர்வு நிகழ்வு HDA - SL அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது.

2022. 10. 27 ஆம் திகதி சாய்ந்தமருது 10 , 8 கிராம சேவகர் பிரிவுகளில் தோணா பகுதியினை அன்மித்துள்ள பொது மக்களுக்கு "தின்மக்கழிவு மேலாண்மை, சுகாதார மேலாண்மை, கலாச்சார அடிப்படையிலான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள்" சம்மந்தமான விளிப்பனர்வு நிகழ்வானது சாய்ந்தமருது - 10 கிராம நிலாதாரி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.

இந் நிகழ்வானது HDA- Sri Lanka அமைப்பின் ஸ்தாபக தலைவர் SAM. அஸ்லம் தலைமையிலும் ஜெ.எம்.ஜுதாப் (பிரதித் தலைவர்) , AJM. ரிக்காஸ் (பொது அமைப்பாளர்) , HM. ஹிசாம் (ஊடக ஒருங்கிணைப்பாளர்) மற்றும் MI.சம்சுதீன் (செய்தி நிருபர் & HDA-SRILANKA இன் ஆலோசகர்) ஆகியோரின் ஒருங்கிணைப்பிலும் நடைபெற்றது. ,

இத்திட்டத்தின் நோக்கம் கழிவுகளிலிருந்து வளத்தை மீட்டெடுப்பதும், கழிவுகளின் விளைவைக் குறைப்பதும் ஆகும்.

கல்முனை மாநகர சபையின் சார்பாக யூ.எம்.இஸ்ஸாக் (CMSO) மற்றும் பொது சுகாதார பரிசோதகர் MOH அலுவலகம், சாய்ந்தமருது, PHI மாநகர சபை கல்முனை -MMM.பைசல் ஆகியோர் பொது மக்களுக்கு கழிவு மேலாண்மை, மறுபயன்பாடு, மறுசுழற்சி மற்றும் மாற்றியமைக்கப்பட்ட கழிவுகள் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி மற்றும் சுகாதரநலம் என்பது பற்றிய நல்ல தகவல்களினை பொது மக்களுக்கு தெளிவுபடுத்தினார்கள்.

மற்றும் இந்நிகழ்வில் கிரம சேவை உத்தியோகத்தர்களாக சாய்ந்தமருது -8 கிராம நிலாதாரி A.நஜீபா, சாய்ந்தமருது - 10 கிராம நிலாதாரி AL .நாசர் ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் , அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களான A.பாரூக், SA. .இம்ரான், MH.முபாரக் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :