கல்முனை சுன்னத் ஜமாஅத் இளைஞர் பேரவை அமைப்பின் புதிய நிருவாக சபைத் தெரிவும் பொதுக்கூட்டமும் !நூருல் ஹுதா உமர்-
ல்முனை சுன்னத் ஜமாஅத் இளைஞர் பேரவை அமைப்பின் புதிய நிருவாக சபைத் தெரிவும் பொதுக்கூட்டமும் அமைப்பின் தவிசாளர் உஸ்தாத் சபா முஹம்மத் நஜாஹி தலைமையில் அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது அமைப்பின் நடப்பாண்டுக்கான நிர்வாக தலைவராக மௌலவி எம்.ஆர்.எம். பர்ஸாத் மஹ்ழரி தெரிவுசெய்யப்பட்டதுடன் உபதலைவராக மௌலவி எம்.என்.எம்.றிஸ்கான் வாஹிதியும், செயலாளராக மௌலவி ஏ.ஆர்.எம்.முஆதிர் முஸ்தபியும், உபசெயலாளராக மௌலவி ஏ.ஆர்.எம். சிப்ரான் மன்பயியும், பொருளாளராக ஹாபிழ் எஸ்.எம். பீர் நஜாஹி ஆகியோர் நிருவாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

கடந்த காலங்களில் பல சன்மார்க்கப் பணிகளில் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய கல்முனை சுன்னத் ஜமாஅத் இளைஞர் பேரவை அமைப்பு எதிர்காலத்தில் பல ஆத்மீக மற்றும் சமூகப் பணிகளில் தம்மை முழுமையாக செயல்படுத்தும் நல்ல நோக்கங்களுடன் தற்போது மீளமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :