கல்முனையில் உலக நோயாளர் பாதுகாப்பு தினம் !



வி.ரி. சகாதேவராஜா-
லக நோயாளர் பாதுகாப்புத் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் நேற்று (19)உலக நோயாளர் பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.

இதன்போது உலக சுகாதார ஸ்தாபனத்தின் இந்தவருட நோயாளர்கள் பாதுகாப்பு தினத்தின் குறிக்கோள்களையும் இலக்குகளையும் நோக்காக கொண்டு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வின் ஆரம்பத்தில் பிரதி வைத்திய அதிகாரிகளான டாக்டர் ஜே.மதன், டாக்டர் எஸ் .ராஜேந்திரன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். அதனைத் தொடர்ந்து "மெடிகேஷன் சேஃப்டி" என்ற தொனிப் பொருளில் கருத்துரைகளை வைத்திய நிபுணர்களான என். உதயகுமார் டாக்டர் எம்.சமீம் டாக்டர் முஸ்தபா இக்ரம் டாக்டர் எஸ் எம்.ரொசாந்த் டாக்டர் எஸ் .எம் .ரசீன் மொஹமட் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சிகளை சிரேஸ்ட தாதிய உத்தியோகத்தர் எஸ்.சிறிகரன் தொகுத்து வழங்கினார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :