சுகாதார அமைச்சின் மக்கள் முறைப்பாட்டு மையம் கல்முனைப்பிராந்தியத்தில் ஆரம்பித்து வைப்பு !



நூருல் ஹுதா உமர்-
லக வங்கியின் நிதி அனுசரனையில் அமுல்படுத்தப்பட்டு வரும் PSSP செயற்றிட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சின் கீழமைந்த மக்கள் முறைப்பாட்டு மையம் கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் இனால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதற்கமைவாக பொது மக்கள் 1907 என்ற இலக்கத்தின் ஊடாக சுகாதார நிறுவனங்கள் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என்பதுடன் எதிர்பாலத்தில் QR முறை ஊடாகவும் இணைய வசதிகள் மூலமும் இம்முறைப்பாடுகளை பதிவு செய்யும் விரிவாக்கல் நடைமுறை இடம்பெறவுள்ளதாகவும் பணிப்பாளர் இந்நிகழ்வில் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சினால் மேற்படி திட்டத்தை மேற்பார்வை செய்து அமுல்படுத்தும் குழுவில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதி பணிப்பாளர் வைத்தியர் எம்.பீ.ஏ வாஜித் இன்று நடைபெற்ற PSSP மீளாய்வு கூட்டத்தில் குறைதீர்க்கும் பொறிமுறை பற்றி தெளிவுபடுத்தினார். குறித்த கூட்டத்தின் வளவாளராக கலந்து கொண்ட திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம் மாஹிர் கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் PSSP செயற்றிட்டத்தின் மூன்றாவது கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் பிரதேச வைத்திய அதிகாரிகள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களை தெளிவுபடுத்தியதுடன் PSSP செயற்றிட்டத்தினை அமுல்படுத்துவதில் வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகளையும் கேட்டறிந்து கொண்டார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :