கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி ஸஹிரியன் பழைய நண்பர்கள் சம்மேளனம் ZOFA ஒழுங்கு செய்துள்ள மெற்ரோபொலிடன் ஸஹிரியன் பிரிமியர் லீக் சீசன் 2 பழைய மாணவர் கிரிக்கட் சமர் 2022 எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 2 மணிக்கு கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள பழைய மாணவர் கிரிக்கட் சமரில் லெஜன்ஸ் ஒப் ஸஹிரியன் 2014 , 16 ஸஹிரியன்ஸ் 2016 , யூ.இஸட்.எப்.ஏ UZFA 91, ஸஹிரியன்ஸ் 90, கிளாஸ் ஒப் 13. 2013, ஸஹிரியன்ஸ் வொல்ப் 2017, 91 மெட்ஸ் 2010, மெக்ஸ் சாஜர்ஸ் 2012, ரீம் team 92 .2011, சுப்பர் வரீயர்ஸ் 2007, ரீம் team 99 . 2018, ஸஹிரியன்ஸ் விக்கிங்ஸ் 2015, ஸஹிரியன் வை.ரூ.கே Y2K .2000, கிளசிகல் ஸீரோ வண் classical zero one 2001, அலியார் ரெஜிமன்ட் 2004, ஸெஸ்டோ ZESDO 99. 1999, ஸஹிரியன்ஸ் லயன்ஸ் 2006, கஜபா 08. 2008, சுப்ப ஹீரோஸ் 97.1997, ஸஹிரியன்ஸ் 98.1998, ஸஹிரியன்ஸ் 92. 1992, ஸஹிரியன்ஸ் 90. 1993, நொட் அவுட் NOT OUT 92.1995, பவர் பிளேயர்ஸ் 96.1996, யுனைடெட் ஸஹிரியன்ஸ் 2.0. 2002, பெச் Batch 05. 2005, கிறிக் crick 90. 1990, ரீம் team 2 K .2011, பூம் பூம் ஸஹிரியன்ஸ் 2013 ஆகிய 29 பழைய மாணவர் அணிகள் பங்கேற்கவுள்ளன.
சம்பியன்களாக தெரிவு செய்யப்படும் அணிக்கு 25,000 ரூபா பணப்பரிசும் சாம்பியன் கிண்ணமும், இரண்டாம் இடத்தைப்பெறும் அணிக்கு 15,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்படவுள்ளன.
கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வில் மெற்ரோபொலிடன் கல்லூரி தவிசாளரும், முன்னாள் கல்முனை மாநகர மேயரும், இக்கல்லூரியின் பழைய மாணவருமான கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாகவும், கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஸஜ்துல் நஜீம் கெளரவ அதிதியாகவும், சாய்ந்தமருது கோட்ட கல்விப் பணிப்பாளரும் இக் கல்லூரியின் பழைய மாணவருமான என்.எம்.அப்துல் மலீக் மற்றும் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் இக் கல்லூரியின் பழைய மாணவருமான எஸ்.எல்.சம்சுதீன் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
0 comments :
Post a Comment