ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 70வது ஊடகக் கருத்தரங்கு


அஷ்ரப் ஏ சமத்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 70வது ஊடகக் கருத்தரங்கு 21வது நுாற்றாண்டில் ஊடகம் உலகம் எனும் தலைப்பில் வறாக்காப்பொல பிரதேசத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட சிரேஸ்ட மாணவ மாணவிகளுக்கான கருத்தரங்கு வராக்காப்பொல பாபுல் ஹசன் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

இந் நிகழ்வு முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவா் சிரேஸ்ட ஊடகவியலாளருமான புர்ஹான் பீபி இப்திக்காா் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வினை ஜ.ரீ.என். வசந்தம் தொலைக்காட்சி சிரேஸ்ட செய்தி ஆசிரியா் சித்தீக் ஹனிபா மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கமும் ஏற்பாடு செய்திருந்தது. இந் ஊடகக் கருத்திரங்கில் 200க்கும் மேற்பட்ட சிரேஸ்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா். முழுநாள் கருத்தரங்கில் சிரேஸ்ட ஊடகவியாலா்களான என்.எம். அமீன், எம்.ஏ.எம். நிலாம், தாஹா முஸம்மில், ஜாவித் முனவா் சமிகா, அஸ்ரப் ஏ சமத், இஸ்பஹான் ஆகியோா் பத்திரிகை, மற்றும் இலத்திரணியல் ஊடகக் கருத்தரங்கு விரிவுரைகளை நடாத்தினாா்கள்.
பிற்பகல் பங்கு பற்றிய 200க்கும் மேற்பட்ட மாணவா்களுக்குச் சான்றிதழ் வழங்கும் விழாவில் பாபுல் ஹசன் தேசிய பாடசாலையின் கூ்ட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இவ் வைபபவத்தில் கல்லுாரியின் அதிபா் திருமதி எம்.ஜ. நசீரா,, வரக்காப்பொலை பிரதேச சபையின் தவிசாளா் சரத் சுமனசூரிய, பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தவைா் எம்.பி.எம். சரீப், மற்றும் கல்லுாரியின் பிரதி அதிபா் முன்னாள் அதிபா்கள் ஆசிரியா்களும் மீடியா போரத்தின் உறுப்பிணா்களும் கலந்து சிறப்பித்தனா்.


இந் நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளாின் சித்தீக் ஹனிபாவின் ஊடக சேவையைப் பராட்டி போரத்தினால் அவருக்கு பொன்னாடை போற்றி கௌவிப்பும் திறமைகளை வெளிக்காட்டிய மாணவ மாணவிகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :