ஜாஹீர் பௌண்டேசன் மற்றும் சமூக அபிவிருத்தி சபையின் வருடாந்த ஒன்று கூடல்!எம்.வை.அமீர்-
ஜாஹீர் பௌண்டேசன் மற்றும் சமூக அபிவிருத்தி சபையின் வருடாந்த ஒன்று கூடல் கடந்த 03.09.2022 ஆம் திகதி ஜாஹீர் பௌண்டேசன் மற்றும் சமூக அபிவிருத்தி சபையின் ஸ்தாபக தலைவரும் காரைதீவு பிரதேச சபையின் பிரதித் தலைவருமான கௌரவ ஏ.எம்.ஜாஹீர் ஜே.பி. தலைமையில் சவளைக்கடைத் தோட்டத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக அல் ஹாஜ் ஏ.மன்சூர்(லத்தீப்) அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

நிகழ்வில் அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.பஸ்லூன், அமைப்பின் பொருளாளர் ஏ.எம்.முஹாஜிரீன் மற்றும் பிரதி தலைவர் எஸ்.சுஜான், சிரேஷ்ட ஆலோசகர் பி.சம்சுதீன், தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.எம்.முபாரக் உள்ளிட்ட சபையின் உயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஒன்று கூடலின் போது அமைப்பின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அத்துடன் நினைவுச்சின்னங்களும் பரிமாறப்பட்டன.

இறுதியாக உறுப்பினர்களுக்கிடையே விளையாட்டுக்களும் இடம்பெற்று உணவுடன் நிகழ்வுகள் நிறைவுற்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :