கல்வி வளர்ச்சிக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன்; குச்சவெளி தவிசாளர் முபாறக் தெரிவிப்பு!பைஷல் இஸ்மாயில் -
ன்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த உயர்தர பெறுபேறுகள் அடிப்படையில், இலங்கை வரலாற்றில் முதன்முறையாக திருகோணமலை மாவட்டம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளதாக குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாறக் தெரிவித்தார்.

புல்மோட்டை ஹாபிழ் கல்விசாலையில் கல்விகற்று சித்தியடைந்த புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களை கௌரவிக்கு நிகழ்வு இன்று (06) ஹாபிழ் கல்விசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாறக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை வெளியான க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் பகுப்பாய்வுத் தெரிவில் குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட மாணவர்களின் பெறுபேறுகள் பெரிதும் பங்காற்றியுள்ள உண்மையை இங்கு ஒருதடவை ஞாபகப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.

அந்த மாணவயர்களின் வெற்றிக்கு வெறுமனே தனியார் கல்விக்கூடங்கள் மட்டுமல்ல, அவர்கள் கல்விகற்ற பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரின் பங்களிப்புகள் அதிலிருப்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

இம்முறை புல்மோட்டையில் இருந்து பொறியியல் துறைக்கும் எமது மாணவச் செல்வங்கள் தெரிவாகியுள்ளனர். அம்மாணவர்களை நாம் பாராட்டி விடுவதுடன் மட்டும் நின்றுவிடாமல் இதுபோன்ற இன்னும் பல மாணவர்களை எதிர்காலத்தில் பல துறைகளில் உருவாக்க நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். அதற்காக என்னால் இயன்ற உதவிகளைச் செய்ய தயாராகவும் இருக்கின்றேன்.

எமது பிரசேத்தில் மேலதிக வகுப்புக்குச் சென்று கல்விகற்க விரும்புகின்ற மாணவர்கள் தங்களுக்கு மேலதிகமாக ஏற்படும் செலவுகளையும் வழங்கத் தயாராக இருக்கிறேன். அத்துடன் பாடசாலை அபிவிருத்தி மற்றும் கல்வி வளர்ச்சிக்கு நானும், எனது உறுப்பினர்களும் தொடர்ந்து உறுதுணையாக இருப்போம் என்றார்.
இந்நிகழ்வில் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், வைத்தியர்கள், கல்விமான்கள் உள்ளிட்ட பல அரச உத்தியோகத்தர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :