ஓமான் நாட்டுக்கான இலங்கைத் தூதுவராக தெரிவு செய்யப்பட்டு செல்லும் ஸபறுல்லா கானை கௌரவிக்கும் நிகழ்வு


ஏ.எஸ்.எம்.ஜாவித்-
மான் நாட்டுக்கான இலங்கைத் தூதுவராக தெரிவு செய்யப்பட்டு செல்லும் ஸபறுல்லாகானை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று நேற்று கொள்ளுப்பிட்டி மெண்டரினா ஹோட்டலில் அறபு நியுஸ் ஊடகவியலாளரும் கொழும்பு டைம்ஸ் இணையத்தின் முகாமையாளருமான மொஹமட் றசூல்தீனின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான கொரிய தூதரகத்தின் தூதுவர் வூன்ஜிங் ஜியோன், இலங்கைக்கான பங்களாதேசின் உயர் ஸ்தானிகர் தாரிக் ஆரிபுல் இஸ்லாம், இலங்கைக்கான பலஸ்தீன் நாட்டின் தூதுவர் கலாநிதி சுஹைர் ஹம்டல்லாஹ் ஸெய்த், இலங்கைக்கான துருக்கி நாட்டின் தூதுவர் டைமெத்செகிர் சியாக்லு, இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதி தலைமை அதிகாரி டக்ளஸ் சொனக், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கௌவுன்சிலர் பானு பிரகாஸ், இலங்கைக்கான பாகிஸ்தான் நாட்டின் உயர் ஸ்தானிகர் றஸாகான், பாகிஸ்தான் நாட்டின் இலங்கைகான உயர் ஸ்தானிகராலயத்தின் முதலாவது செயலாளர் றவுப் றிஸ்வான். இலங்கைக்கான மாலை தீவு நாட்டின் தூதரகத்தின் இரண்டாவது செயலாளர்களான மரியம் ஸானிகா, ஹ_ஸைன் மாசின் உள்ளிட்டவர்கள் விசேட அதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.
கௌரவ அதிகளாக ஓமான் நாட்டின் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத், துருக்கி நாட்டின் இலங்கைத் தூதுவர் மொஹமட் றிஸ்வி ஹஸன், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சிதாரா கான், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் அன்ஸார், ரவலர் குளோபல் நிறுவனத்தின் தலைவர் றிஸ்மி றியால், டவர்கோல் நிறுவனத்தின் உறுப்பினர் ஹாசிம் உமர், ஜே.ஜே.பவுண்டேசன் தலைவர் ஹனிப் ஹாஜி, இளம் மாதர் முஸ்லிம் அமைப்பின் தலைவி பவாஸா தாஹா, இலங்கை மலேசிய வர்த்தக சங்க தலைவர் காலித் பாறுக், மெக்சன் கோல்டிங் முகாமைத்துவப் பணிப்பாளர் மிஸ்வர் மக்கீன், பிரதி தலைவர் நிருக்சி டி சில்வா, பணிப்பாளர் சாரா சில்வா உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது தூதுவர் ஸபறுல்லா கானை புரவலர் ஹாசிம் உமரும் றசூல்டீனும் பொன்னாடை போர்த்தி கௌரவித்து தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :