வாழைச்சேனை அந்நூர் மாணவி அப்ரோஸ் ஜஹான் தேசியத்தில் முதலிடம்



எச்.எம்.எம்.பர்ஸான்-
தேசிய மட்ட வாசிப்பு போட்டி நிகழ்ச்சியில் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவி ஏ.ஏ. அப்ரோஸ் ஜஹான் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் தெரிவித்தார்.

100 ஆவது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு இலங்கை தேசிய கூட்டுறவு பேரவை அண்மையில் நடாத்திய தேசிய மட்ட பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டே இம் மாணவி இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் தரம் 12 உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்று வரும் குறித்த மாணவி அப்ரோஸ் ஜஹானுக்கு பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.

இவ்வாறு தேசியத்தில் சாதனை படைத்து பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்த மாணவிக்கு கல்வி அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் எனப்பலரும் பராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :