ஊழலையும் வீண்விரயத்தையும் தவிர்த்து ஒரு நாடாக நாம் எழுந்து நிற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.-இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ



முனீரா அபூபக்கர்-
ழலையும், வீண்விரயத்தையும் தவிர்த்த ஒரு நாடாக நாம் எழுந்து நிற்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் திரு.அருந்திக பெர்னாண்டோ தெரிவித்தார்.

அதற்காக நாம் அனைவரும் அதிகபட்ச தியாகங்களைச் செய்ய வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்

கொலன்னாவை அரச தொழிற்சாலைகள் திணைக்களத்திற்கு நேற்று (21ஆம்) இடம்பெற்ற கண்காணிப்பு விஜயத்தின் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு அரசியல் அதிகாரிகளும் மற்றும் சில அரசாங்க அதிகாரிகளும் காரணம் என தெரிவித்த அமைச்சர், அதனை நாம் புரிந்து கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதன்போது மேலும், கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், கடந்த காலங்களில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்நிறுவனம், தனியார் துறையை இணைத்து தமது பணியை இந்த நிறுவனத்திற்கு வழங்கி நாட்டிற்கு மிகப்பெரும் பலம் சேர்க்கக் கூடிய நிறுவனமாகும். இதனை இலாபகரமான நிறுவனமாக மாற்றியமைக்க வேண்டும். நிறுவனத்திற்குள் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். புதிய தொழில்நுட்பம் இணைக்கப்பட வேண்டும். நன்கு பணியாற்றக்கூடிய பணியாளர்கள் குழு இங்கு பணியாற்றுவதை நாங்கள் கண்டோம், எனவே இந்த நிறுவன ஊழியர்களுக்கு அதிகபட்ச பலத்தை வழங்க வேண்டும். ஏனைய அரச நிறுவனங்களில் இருந்து அதிகபட்ச வேலைகள் பெற்று நாம் நிறுவனத்தை உயர்த்த வேண்டும்.

இங்கு, இத்துறையின் வார்ப்பு பிரிவுகள் உலோக வேலைப்பாடு பிரிவுகள், இலகு வார்புப் பிரிவுகள், இயந்திர வேலைப் பிரிவுகள், கனரக வெல்டிங் பிரிவுகள், வாகனப் பராமரிப்புப் பிரிவுகள், தச்சுப் பணிகள் பிரிவுகளில் எவ்வாறு பணிகள் நடைபெறுகின்றன என்பதை இராஜாங்க அமைச்சர் பார்வையிட்டார். அந்த பிரிவு ஊழியர்களுடன் நட்பு உரையாடினார்.

அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களம் 1849 ஆம் ஆண்டு கொழும்பு கெஸ்பஹா சந்தியில் ஸ்தாபிக்கப்பட்டுத. பின்னர் 1928 ஆம் ஆண்டு தற்போதைய கொலன்னாவ பிரதேசத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிறுவனம் அரச மற்றும் தனியார் துறைகளில் அனைத்து இயந்திர பொறியியல் பணிகளையும் நிறைவேற்றுவதற்காக நிறுவப்பட்டது. இங்கு 367 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தினால் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு நீர் கட்டுப்பாட்டு கதவுகளை தயாரித்தல் மற்றும் வழங்குதல், அவற்றை பொருத்துதல் மற்றும் பராமரித்தல், தபால் திணைக்களத்தில் திகதிமுத்திரைகள் மற்றும் திகதித் தொகுதிகள் தயாரித்தல் மற்றும் வழங்குதல், பொலிஸ் திணைக்களத்தில் இலக்கத் தகடுகள் மற்றும் சார்ஜென்ட் பெல்ட்கள் செய்தல், மர தளபாடங்கள் செய்தல்இ செய்தல் நீர் வழங்கல்சபையில் நீர் சுத்திகரிப்பு தொட்டிகள், அரச நிகழ்வுகளுக்கான வரவேற்புகள், மேடைகள் பொருத்துதல், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு இரும்பு பாலங்கள் அமைத்தல் வாகன சேவைகளை நிறுவுதல் மற்றும் அரச நிறுவனங்களை பராமரித்தல் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை தயாரித்தல் மற்றும் வழங்குதல் சீனாவில் செய்யப்பட்ட பிரேக் பேடுகள், மரம் மற்றும் இரும்பினால் ஆன மருத்துவமனை உபகரணங்களை தயாரித்தல் மற்றும் வழங்குதல், கொதிகலன்கள் மற்றும் எரிவாயு குழாய் அமைப்புகளை பராமரித்தல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொறியியல் மாணவர்களுக்கு நடைமுறை பயிற்சி வழங்குதல் போன்றவை இடம் பெறுகின்றனர்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், ( கரையோரப் பாதுகாப்பு மற்றும் தாழ்நிலங்கள் ) அனில் விஜேசிறில் அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.பீ வத்துகே பணிப்பாளர் (பணிகள்) ஏ.விஜேசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :