பாராட்டுக்குரிய பைசால் காசிமின் பாராளுமன்ற பேச்சுபாராளுமன்றத்தில் பா.உறுப்பினர் பைசால் காசிம் பேசுவது மிக அரிது. அவர் சாதாரணமாக பேசும் போதே, சில தடுமாற்றங்களை அவதானிக்க முடியும்.

இன்றைய அவரது பாராளுமன்ற உரை மிக நேர்த்தியாக இருந்தது. நிந்தவூரானது கடலரிப்பால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை பாதுகாக்க ஒதுக்கப்பட்ட 20 மில்லியன் பணம் உடனடியாக எவ்வாறு கிடைத்தது என்பதை அவர் தெளிவாக விளக்கியிருந்தார். அது வேறு வழியில் கிடைக்க சாத்தியமா என்பது சந்தேகமே!

இந்த கடலரிப்பு பிரச்சினை பற்றி அரசியல் வாதிகள் பலரும் பேசினாலும், இந்த கடலரிப்பு பிரச்சினைக்கு துறைமுகம் தான் காரணம் என்பதை பேச தயங்குவார்கள். அதற்கு அரசியல் காரணங்கள் பலவுண்டு. இன்று பா.உறுப்பினர் பைசால் காசிம் எந்த அச்சமுமின்றி கடலரிப்புக்கு துறைமுகமே காரணம் என்பதை கூறியது மாத்திரமல்லாது, அது தேவையற்ற ஒன்று எனவும் பகிரங்கமாக கூறியிருந்தார். இந்த தைரியம் நிச்சயம் பாராட்டுக்குரியது.

அவர் குறித்த விடயத்தை வெளிப்படுத்தும் போது முன்னாள் மு.காவின் தலைவர் அஷ்ரபிற்கும் இந்நாள் தலைவர் ஹக்கீமுக்கும் எதிராக தனது கருத்து அமையாத வண்ணம் மிக நுணுக்கமாக உரையாற்றியிருந்தார். தேவைக்கில்லாமல் யாரையும் வம்பிற்கிழுக்காது விடயத்தையும் பேசுவது பேச்சின் சாதூர்யம் எனலாம். அவர் குறித்த உரையை சிங்கள மொழியில் அமைத்திருந்தமை இன்னும் சிறப்புக்குரியது. அவ்வுரை தமிழில் அமைந்திருந்தால் எம்மவர்கள் அதிகம் பாராட்டி இருப்பார்கள். செல்ல வேண்டிய இடத்துக்கு சென்றிருக்காது.

கடலரிப்புக்கு உடனடி தீர்வு அவசியம்... இது அரசியல் செய்யும் விடயமல்ல.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :