றஹ்மானியா மத்ரஸா மாணவர்களுக்கு பாராட்டு-கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் பிரதம அதிதியாக பங்கேற்பு.நூருல் ஹுதா உமர்-
காத்தான்குடி குர்-ஆன் அபிவிருத்திச்சங்கத்தினால் நடாத்தப்பட்ட குர்-ஆன் போட்டிப்பரீட்சையில் பாலமுனை றஹ்மானியா குர்-ஆன் மதரஸாவிலிருந்து தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசில்கள் மற்றும் கெளரவம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

பாலமுனை முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் பிரதம அதிதியாக பங்கேற்று மாணவர்களுக்கான கெளரவத்தினையும் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

நிகழ்வில் ஆரையம்பதி மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.பீ.எம்.றசீம், ஏ.எல்.எம்.அன்சார், முஹம்மட் சியாத், முன்னாள் காத்தான்குடி பிரதேச கல்வி அதிகாரி எம்.ஏ.சி.எம் பதுர்தீன், முன்னாள் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றுஸ்வின் முஹம்மட் அதிபர்கள், உலமாக்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :