கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் க.பொ.த.சாதாரண தர பகுதியினால் வகுப்புகளுக்கு இடையிலான ஓடினெறியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி அண்மையில் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
10. க.பொ.த.சாதாரண தர பிரிவு வகுப்புகள் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபீர் பிரதம அதிதியாகவும்
பிரதி அதிபர் ஏ.எச்.எம்.அமீன், பகுதித் தலைவர் ஷஃபி எச். இஸ்மாயில் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், பிரதி பகுதி தலைவர் எம்.பி. மஹ்ரூப், உதவி பகுதி தலைவர் ஏ.எல்.எம். ராயிஸ் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
மேற்படி சுற்றுப் போட்டியில் கிரே கலக்ஸி அணி Grey galaxy அணி வெற்றி பெற்று ஓடினெறியன் பிரிமியர் லீக் சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
சிரேஷ்ட ஆசிரியர்கள், வகுப்பாசிரியர்கள், பாட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment