சம்மாந்துறை வலயத்தின் பாடசாலை மட்ட முதலாவது சித்திர அறை இன்று(15) வியாழக்கிழமை சொறிக்கல்முனை ஹொலிகுறோஸ் மகா வித்தியாலயத்தில் திறந்து வைக்கப்பட்டது.
மகா வித்தியாலய அதிபர் அருட்சகோதரி சிறிய புஷ்பம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சம்மாந்துறை வலய கல்விப்பணிமனையின் பிரதிக்கல்வி பணிப்பாளர் யசிர் அரபாத், உதவி கல்விப் பணிப்பாளர்களான நசீர் , றியால் ,நைரூஸ்கான் , சகாதேவராஜா ஆகியோர் கலந்து கொண்டு நாடா வெட்டி திறந்து வைத்தார்கள்.
சித்திர பாடத்திற்கான வலய இணைப்பாளர் முனாப் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.
பாடசாலையின் சித்திர ஆசிரியர் ரி. வாமதேவனின் ஏற்பாட்டில் இந்த முதலாவது சித்திர அறை திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment