ஓரிரு நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் உயிரியல் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் தமிழ்வண்ணன் துவரகேஷ் மற்றும் செங்கலடியைச் சேர்ந்த மாணவன் லோகிதன் கிஷோபன் ஆகியோருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் விசேட பாராட்டுக்களை ஏற்பாடு செய்து பணப் பரிசில்களையும் வழங்கினார். பௌதீகவியல் பிரிவில் நாடளாவிய ரீதியில் நான்காம் இடத்தைப் பெற்ற மட்டக்களப்பு மத்திய மகா வித்தியாலய மாணவனையும் பாராட்டினார்.
இதன்படி வியாழக்கிழமை (01) காலை ஆளுநர் கல்வி கற்கும் பாடசாலைகளுக்குச் சென்று மாகாண சபையின் ஏற்பாட்டின் கீழ் குறித்த மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாவை வழங்க ஏற்பாடு செய்தமை விசேட அம்சமாகும்.
மேலும், இந்த ஆண்டு அக்கல்லூரிகளில் உயர்தரத் தேர்வில் அதிக சித்திகளை பெற்ற மாணவர்களையும் பாராட்டினார்.
இந் நிகழ்வில், ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதநாயக்க, மாகாணக் கல்விப் பணிப்பாளர் என்.பிள்ளைநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment