அடிக்கடி களவு கொள்ளைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேக நபர்கள் இருவரை வாழைச்சேனை பொலிசாரால் கைது



J.f.காமிலா பேகம்-
டிக்கடி களவு கொள்ளைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேக நபர்கள் இருவரை வாழைச்சேனை பொலிசார் நேற்று (26) அதிகாலை கைது செய்துள்ளனர்.

வாழைச்சேனை நாவலடி பிரதேசத்தில் இருந்த வீடொன்றில் தங்கநகை, சைக்கள் வெளிநாட்டு பால்மா டின்கள் பாஸ்மதி அரிசி மூடை ,வாகன என்ஜின் ஒயில் , ஒலிவ் ஒயில் அடங்கிய கலன்கள் போன்ற பல பெறுமதி வாய்ந்த பொருட்கள் கொள்ளைடிக்கப்பட்டுள்ளன.

சுமார் பதினேழு லட்சம் பெறுமதியான பொருட்கள் வீட்டினர் இல்லாத ,மின்சாரம் தடைப்பட்ட வேளையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் தொடராக களவுகளில் ஈடுபட்டவர்களே இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சந்தேக நபர்கள் ஏற்கனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு கண்டி ,மட்டக்களப்பு சிறைச்சாலைகள் இருந்து விடுவிக்கப்பட்டாலும், மீண்டும் பல குற்றங்களுக்காக பொலிசாரால் வழக்குகள் தற்போதும் நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ளன.

பல முறை பிணையில் விடுவிக்கப்பட்டாலும் குற்றங்களை தொடர்ந்த வண்ணமே உள்ளனர்.போதைவஸ்து பாவனைக்காகவே இக்குற்றங்களை தொடர்ந்தும் மேற்கொண்டுள்ளனர். அபூபக்கர் ரஸாக் மற்றும் அலி என்ற பெயருடைய இருவரே தற்போது வாழைச்சேனை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்னர்.

நாவலடி மதீனா பாடசாலைக்கு முன்னால் பெட்டிக்கடை நடாத்திய அபூபபக்கர் ரஸாக் என்பவர் நள்ளிரவில் சிறிய ரக "படி"வாகனத்தில இக்ககளவு பொருட்களை பொலன்னருவை பகுதிகளுக்கு அனுப்புவதற்காக பண்டகசாலையாக இப்பெட்டிக்கடையை பாவித்துள்ளனர்., பொதுமக்கள் தொடர்ந்தும் களவு சம்பந்தமாக பல முறைப்பாடுகளை வாழைச்சேனை பொலிசுக்கு தெரிவித்துள்ளனர். ,களவுகள் தொடர்ந்தும் இப்பகுதியில் இடம்பெற்ற வண்ணமே இருப்பதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இக்கொள்ளைசம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் பிரதான சந்தேக நபரான "வரிசையின் பேரன்" என கூறப்படும் நாவலடியை சேர்ந்த ஹாஜரா என்பரின் மகனான நஸீர் என்பவரை பொலிசார் தேடி வருகின்றனர்.போதைவஸ்து பாவனையாளரான இச்சந்தேக நபர், கடந்தவாரம் தான் பொலனறுவை பொலிசாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்.

இக்கொள்ளை சம்பவத்தில் களவு எடுக்கப்பட்ட பல பொருட்கள் வாழைச்சேனைபொலிஸ் சாஜன் பண்டார தலைமையிலான பொலிஸ் குழு நேற்று (26) அதிகாலை தீவிர தேடுதல் செய்து கைப்பற்றப்பட்டடுள்ளது.

இந் நிலையில் கைரேகை பரீட்சை நிபுணர்கள் வருகை தந்து, இக்குறித்தகொள்ளை நிகழ்ந்த வீட்டில் கைரேகைகளை அடையாளங்கண்டுஅறிக்கை மேற்கொண்டதுடன், வாழைச்சேனை பொலிசார் மேலதிக புலன் விசாரணைகளை தொடந்துள்ளதாக வாழைச்சேனை குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி ஐ.பி. கருணாரட்ண தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :