சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்த பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் முகமாக சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் 2000 A/L கற்ற பழையமாணவர்களை ஒன்றிணைத்த "Y2K "அமைப்பு ஏற்பாடு செய்த இரத்த தானமுகாம் சம்மாந்துறை தேசியபாடசாலையில் இன்று (28) இடம்பெற்றது.
"Y2K" அமைப்பினர் ஏற்பாடு செய்த, இரத்த தானம் செய்ய ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 60 பேர் இவ் இரத்த தான முகாமில் கலந்து கொண்டனர்.
இரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Y2K அமைப்பின் தலைவர் ஏ.ஜே காமில் இம்டாட் ஆலோசனைக்கமைய இவ் அமைப்பின் உறுப்பினர் ஏ.ஜேசபீர் அவர்களின் ஏற்பட்டில் இடம் பெற்ற இவ் இரத்த தான முகாமிற்கு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைபணிப்பாளர் டாக்டர் அஸாத் எம் ஹனிபா வருகை தந்திருந்தை மேலும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment