கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கௌரவிப்பு நிகழ்வுநூருல் ஹுதா உமர்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.ஆர்.எம் தௌபீக் அவர்களுக்கு சனிக்கிழமை சேவைப்பாராட்டு நிகழ்வும் பிரியாவிடை நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி பணிப்பாளர், பிரிவுத்தலைவர்கள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களுடன் வைத்திய அத்தியட்சகர்களும் பிரதேச வைத்திய அதிகாரிகளும் சுகாதார வைத்திய அதிகாரிகளும் கலந்து கொண்டு தமது பாராட்டுக்களை பதிவு செய்து நினைவுச் சின்னங்களையும் வழங்கி வைத்தனர்.

நேர்மையான பணி செய்து கொரோனா ஒழிப்புக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டமைக்காக பணிமனையினாலும் வைத்தியசாலைகளினாலும் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.ஆர். எம் தௌபீக் அவர்கள் தேசிய கண் சிகிச்சை வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்று செல்லவுள்ள நிலையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :