கல்முனை சிங்கள மகா வித்தியாலய வகுப்பறை கூரை சரிந்தது : பாடசாலை குறைநிறைகளை ஆராய கள விஜயம் செய்தார் ஹரீஸ் எம்.பி



நூருள் ஹுதா உமர்-
ல்முனை சிங்கள மகா வித்தியாலய குறைநிறைகளை ஆராயும் கள விஜயம் ஒன்று கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரரின் அழைப்பின் பேரில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களினால் செவ்வாய்க்கிழமை (29) மேற்கொள்ளப்பட்டது.

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரரை சந்தித்து கலந்துரையாடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், கல்முனை சிங்கள மகா வித்தியாலயத்தியாலய வகுப்பறை கூரையின் பகுதிகள் உடைந்து விழுந்துள்ள விடயங்களை பாடசாலைக்கு விஜயம் செய்து பார்வையிட்டதுடன் வகுப்பறைகள் கட்டிடங்கள் சேதமாகியுள்ள விடயங்களை கண்டறிந்து கொண்டார். மேலும் பாடசாலையின் தேவைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தியதுடன் இது தொடர்பில் உரிய அதிகாரிகளை தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இதன்போது தெரிவித்தார்.

இந்த விஜயத்தில் கல்முனை சிங்கள மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்யோக செயலாளர் நௌபர் ஏ பாபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :