காரைதீவு விவசாயிகளுக்கு யூறியா வழங்கலில் பாரபட்சமா? யூறியாவில் உப்பா? விவசாயிகள் திண்டாட்டம்:ஆளணி இன்றி அலுவலகம் தவிப்பு!வி.ரி.சகா-
காரைதீவு கமநல பிரிவுக்குட்பட்ட 1442 ஏக்கர் காணிக்குரிய 636 விவசாயிகள் யூறியா கிடைக்கப்பெறாமல் திண்டாடுகின்றார்கள்.

காரைதீவின் நான்கு கண்டங்களைச்சேர்ந்த 636 விவசாயிகள் யூறியா வழங்கலில் புறக்கணிப்பு தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடாத்த திட்டமிட்டுவருகிறார்கள்.

அம்பாறை மாவட்டத்தில் அறுவடை இடம்பெற்ற நிந்தவூர் மகாஓயா பல்லன்ஓயா போன்ற பிரதேசங்களுக்கு யூறியா வழங்கப்பட்டபோதிலும் அறுவடை இன்னும் 50வீதம் நடைபெறாமலுள்ள காரைதீவு போன்ற பகுதிகளுக்கு யூறியா மறுக்கப்படுவதேன் என விவசாயிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இதேவேளை ,இப்போகத்தின்போது கள்ளச்சந்தையில் 40ஆயிரம் ருபாவுக்கு விற்கப்பட்ட யூறியாவைப் பயன்படுத்திய விவசாயிகளுக்கு விளைச்சல் வெகுவாக குறைந்துகாணப்பட்டது. ஏக்கருக்கு 20 விளைந்துள்ளது. அதற்கு காரணம் யூறியாவில் உப்பு கலக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதனை கண்டறியுமுகமாக கண்டியிலிருந்து விவசாயத்திணைக்கள ஆராய்ச்சி உயர்அதிகாரிகள் அம்பாறைக்கு வந்த ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றனர்.


இதேவேளை ,காரைதீவு கமநல சேவை நிலையத்தில் ஆக 4 ஊழியர்களே சிரமத்தின் மத்தியில் பணியாற்றுகின்றனர். இங்கு பணியாற்றிய 3உத்தியோகத்தர்கள் ஒரு மாதகாலத்திற்கென தற்காலிகமாக வேறு பிரதேசங்களுக்கென மாற்றப்பட்டபோதிலும் ஒரு வருடமாகியும் இன்னும் மீண்டும் அவர்கள் இங்கு நியமிக்கப்படாமை குறித்து விசனம் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அலுவலகத்தில் ஆளணித்தட்டுப்பாடு நிலவுகிறது. விவசாயிகளின் கருமங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் தமது கருமங்களை முடிக்கச்செல்லும் விவசாயிகள் நாட்கணக்கில் அலையவேண்டியுள்ளது. எனலே அம்பாறை மாவட்ட கமநல உதவி ஆணையாளர் இதுவிடயத்தில் தலையிட்டு குறித்த 3 உத்தியோகத்தர்களையும் மீண்டும் காரைதீவுக்கு மாற்றி வினைத்திறனுடனான சேவையை முன்னெடுக்கவேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :