பாக்கிஸ்தானின் உயரிஸ்தானிகர் மேஜர் ஜென்ரல் உமர் பாரூக் புர்கியை காதர் மஸ்தான் சந்தித்து கலந்துரையாடினார்




லங்கைக்கான பாக்கிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயரிஸ்தானிகர் மேஜர் ஜென்ரல் (ஓய்வு பெற்ற) மேன்மைதாங்கிய உமர் பாரூக் புர்கி அவர்களை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்கள் நேற்று (18) உயர்ஸ்தானிகராலயத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலின் போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி சம்பந்தமாகவும் மூன்று தசாப்த்தங்களாக இடம்பெற்ற கொடிய யுத்தத்திற்கு பிற்பாடு வன்னி மாவட்ட மக்கள் எதிர் நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் சம்பந்தமாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெளிவுபடுத்தினார்.
அத்துடன் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசிற்கும் இலங்கைக்குமான நீண்ட கால நட்புறவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காதர் மஸ்தான் அவர்கள் இச்சந்திப்பின் போது நினைவுபடுத்தியதுடன் கடந்த காலங்களில் எமது நாட்டிற்கு செய்த அளப்பறிய உதவிகளுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :