காத்தான்குடியை பிறப்பிடமாக கொண்ட. ஆயிஷா ஷிஹாறா சட்டத்தரணியானார்



காத்தான்குடியை பிறப்பிடமாகவும், கொழும்பு, கல்கிஸ்ஸையை வசிப்பிடமாகவும் கொண்ட ஆயிஷா ஷிஹாறா ஷபீக் கான் கடந்த 05.08.2022 (வெள்ளிக்கிழமை) அன்று கொழும்பு, புதுக்கடை உயர் நீதிமன்றத்தில் பிரதம நீதியரசரின் முன்னிலையில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். 
இவர் துறைமுக அதிகார சபையின் ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் முஹம்மது ஷபீக் கான், உம்முல் ரஸீனா தம்பதியின் சிரேஷ்ட புதல்வியும், காத்தான்குடி 01ஆம் குறிச்சி மர்ஹூம் ஹயாத் கான் ஆசிரியர், மற்றும் காத்தான்குடி 02ஆம் குறிச்சி மர்ஹூம் செய்யது அஹமது ஆலிம் அவர்களின் மூத்த மகளான மர்ஹூமா உம்முகுல்தூம் (வெள்ளிம்மா) ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
 
சட்ட இளமாணிப் பட்டம் (Bachelor of Laws (Hons)), சமூக விஞ்ஞான கலை இளமாணிப் பட்டம் (Bachelor of Arts in Social Sciences) மற்றும் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டத்தரணிக் கற்கையை பூர்த்தி செய்துள்ள, இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் பணிபுரியும் சத்தியப்பிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளரும், KHAN Translation நிறுவனத்தின் உரிமையாளருமான இவர், கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி, காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயம், காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலயம் மற்றும் கொழும்பு அல் ஹிக்மா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியுமாவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :