ஹோமியோபதி மருத்துவ துறையில் புரட்சிகரமான சேவையினை நோயாளர்களுக்கு இலவசமாக வழங்கும் நோக்கில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக ஹோமியோபதி விஷேட வைத்தியர் Dr. ஜெம்சித் தெரிவித்தார்.
இதனடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்குமென இலங்கை ஹோமியோபதி மருத்துவ சபையினால் தெரிவு செய்யப்பட்ட மருத்துவர்களால் அவர்களின் பிரத்யேக மருத்துவ நிலையங்களில் வைத்து நோயாளர்களுக்கான சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாகவும் மாதத்தில் இரண்டு தடவைகள் குறித்த சிகிச்சை இலவசமாக மேற்கொள்வதற்கு வைத்தியர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் நோயாளர்கள் தத்தமது மாவட்டத்திலோ அல்லது தமக்கு அண்மையிலுள்ள விரும்பிய மாவட்டங்களில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வைத்தியர்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை மேற்கொண்டு இலவச ஹோமியோபதி மருத்துவ முகாமிற்கான தினத்தினை அறிந்து சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்வதாக வைத்தியர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment