சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் மாணவர் மன்ற காலைக்கூட்டமும் சாதனையாளர்களுக்கான பரிசளிப்பும்அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் மாணவர்களின் ஆளுமை விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பொதுக் காலைக்கூட்டத்தினை மாணவர்மன்ற காலைக்கூட்டமாக மாற்றியமைக்கும் செயற்றிட்டத்தில் கடந்த திங்கட்கிழமை தரம் 4 டீ வகுப்பு மாணவர்கள் மிகச் சிறப்பான மாணவர் மன்ற காலைக்கூட்டத்தினை செய்திருந்தனர்.

பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் அதிபர் அல்-ஹாஜ் ஏ. அகமட்லெவ்வை அவர்களும், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் பொறியியலாளர் எம்.ஐ.எம். றியாஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக் தோற்றும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு நடைபெற்ற மாதிரிப் பரீட்சையொன்றில் 160 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 17 சாதனையாளர்களுக்கு பரிசில்கள்; வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :