"விசேட தேவையுடையோர்களுக்கான( PARA SPORTS2022) பரா விளையாட்டு விழா"



J.f.காமிலா பேகம்-
"விசேட தேவையுடையோர்களுக்கான( PARA SPORTS2022) பரா விளையாட்டு விழா" இவ்வருடம் 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20,21,22 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட உள்ளது.

இவ்விளையாட்டு விழா தொடர்பாக விளக்கமளிக்கும் பொருட்டு, நேற்று ஊடக சந்திப்பு ஒன்று இடம் பெற்றது.மட்டக்களப்பிலுள்ள கமிட் நிறுவன அலுவலகத்தில் (06.07.2022) நடைபெற்ற இந்த ஊடக சந்திப்பில், மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சம்மேளனத்தில் தலைவரும் டேட்டா சரிட்டி பணிப்பாளர்களாரில் ஒருவரான கந்தசாமி ஜீவராசா, சம்மேளனத்தின் ஆலோசகர் சோமசுந்தரம் புவிராஜசிங்கம், டேட்டா சரிட்டி பணிப்பாளர்களில் ஒருவரான தங்கரெட்ணம் விநாயகமூர்த்தி, கமிட் நிறுவனத் திட்டப்பணிப்பாளர் கந்தவேல் காண்டீபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த டேட்டா சாரிட்டி( Data Charity )நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.அருள்மொழி,

"டேட்டா சரிட்டி ( DATA Charity ) , மட்டக்களப்பு மாற்றுத்திறனாளிகள் சம்மேளனம் ஆகியன இணைந்து நடாத்தும் இந்த விளையாட்டு விழாவில் , கிழக்கு மாகாணத்தில் இருந்து (திருகோணமலை ,மட்டக்களப்பு , அம்பாறை ) 1000 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுடன் 3500பேர் கலந்து கொள்ள உள்ளதை எதிர்பார்ப்பதாக," தெரிவித்தார்.

இந்த விளையாட்டு விழாவுக்கு பிரதான அனுசரணையை அபி டயமன்ட்(Abi Diamend), ராஜ் கிளஸ்டர் (Raj Cluster) மற்றும் லிங்க்ஸ் லீகல் (Lings legal) ஆகிய நிறுவனத்தினர் மற்றும் பல புலம் பெபெயர் அமைப்புகள் வழங்குகின்றன.

"விசேட தேவையுடையோரில் மறைந்திருக்கும் திறன்களை வெளிப்படுத்தவும் , தன் நம்பிக்கையை வளர்த்து ,அவர்கள் பிறரில் தங்கி வாழும் நிலமையை மாற்றி, அவர்களை சமூகத்தில் கௌரவ பிரதிநிதிகளாக ஊக்குவிக்கும் நோக்கத்தை நிறைவேற்ற இவ்விளையாட்டு விழா உதவும் என தாம் எதிர்பார்ப்பதாக" கமிட் நிறுவன திட்டப்பணிப்பாளர் திரு கந்தவேல் காண்டீன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு, மட்டக்களப்பில் இருந்து 26 மாற்றுதிறனாளிகள் அமைப்புகளும் , அம்பாறையில் இருந்து 08 மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களும் , திருகோணமலையில் இருந்து 04 மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களும் இந்த விளையாட்டு விழாவில் கலந்து கொள்கின்றனர்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மாற்றுத்திறனாளிகள், கடந்த 30 வருட யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்விசேட தேவையுடையோரின் அடிப்படை தேவையாக உள்ள, "அனைத்து வசதிகளும் கொண்ட பராமரிப்பு நிலையம்" உருவாக்க அனைவரும் இணைந்து உதவிட வேண்டும் " என்ற பரப்புரையையே, இந்த ஆண்டு விளையாட்டு விழாவில் முன்வைக்க எதிர்பார்க்கின்றனர்..
தமிழ் பரா விளையாட்டு(Tamil Para Sports) விழாவானது 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து 2017,2018 ஆகிய ஆண்டுகளில் வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும், மிக பிரமாண்டமாக நடாத்தப்பட்டது .இவ்வாறு பல போட்டிகளில் கலந்து கொண்ட பல தமிழ் பேசும் விசேட தேவையுடைய விளையாட்டு வீரர்களுக்கு, வெளிநாட்டு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் கிட்டியிருந்தாலும், எதிர்பாராவிதமாக, மட்டக்களப்பை சேர்ந்த ஒரே ஒரு விளையாட்டு வீரரருக்கு மட்டுமே வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்தது என்பது இங்கு கவலைக்குரிய விடயமே.

அதன் தொடர்ச்சியாக, 2020 ஆம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடாத்துவதற்கு இருந்த போதும்,கொவிட் பரவல் காரணமாக இடை நிறுத்தப்பட்டது. இவ்வருடம் மீண்டும் இந்த விளையாட்டு விழா, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20,21 ,திகதிகளில் பிரம்மாண்டமாக மட்டக்களப்பில் நடைபெற உள்ளது..
இந்த. பரா விளையாட்டு போட்டியின் முதல் போட்டி நிகழ்வாக, பார்வை இழந்தவர்களுக்கான "சத்த" பந்து கிரிக்கட் போட்டி இடம்பெறவுள்ளது . இந்த போட்டியில் மட்டக்களப்பை தளமாக கொண்டியங்கும் உதயம்- விழிப்புலனிழந்தோர் சங்கத்தினரும், யாழ். விழிப்புலனிழந்தோர் சங்கத்தினரும் போட்டியில் விளையாட உள்ளனர் .அத்துடன் மேலும் பல விளையாட்டு நிகழ்வுகளும் எதிர்வரும் ஆகஸ்ட்மாதம் 20,21 திகதிகளில் மட்டு-வெபர் விளையாட்டரங்கில் இடம்பெறஉள்ளன.

"இந்த விளையாட்டு விழாவை ஏற்பாடு செய்ய உருதுணை புரியும் மாகாண சமூக சேவைகள் திணைக்களம், விளையாட்டு திணைக்களம் உட்பட பல அரச திணைக்களங்கள் அவ்வாறே அனுரணையாளர்களான. "அபி டையமன்ட்(Abi Diamend)," ராஜ் கிளஸ்டர்(Raj Cluster ) ,"லிங்ஸ் லீகல் (Links legal) " நிறுவனத்தினர் மற்றும் பல புலம் பெயர் அமைப்புக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறோம். இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து தந்து உதவிகள் பல செய்த மூத்த அரசியல்வாதியான திரு சம்பந்தன் ஐயாவுக்கும் (Data Charity) டேட்டா சரிட்டி நன்றிகளை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருப்பதாக " டேட்டா சாரிட்டி(DataCharity)" நிறுவனத்தின் பணிப்பாளர்களானhu திரு கந்தசாமி ஜீவராசா மற்றும் எஸ் அருள்மொழி ஆகியோர் இவ்வூடக சந்திப்பில் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :