நிந்தவூரில் புத்தாக்க கண்டுபிடிப்பாளர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.நூருல் ஹுதா உமர்-
றக்குமதி நெருக்கடிக்கு தீர்வு கானும் புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் நிகழ்வொன்று வியாழக்கிழமை நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம். றயீஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் Lemon Gras, Health Mix, Organic bio Cleaner ஆகிய மூன்று புத்தாக்க கண்டுபிடுப்புக்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் இவற்றை புத்தாக்க சிந்தனையுடன் கண்டுபிடித்தவர்களும் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. அஸ்ரப் தாஹிர், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச்சுசுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :