அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இருதய விசேட வைத்திய நிபுணராக டாக்டர் எம். ஏ. நெளஸாத் அலி நியமனம் !
நூருல் ஹுதா உமர்-
க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இருதய விசேட வைத்திய நிபுணராக டாக்டர் எம். ஏ. நெளஸாத் அலி முதல்முறையாக சுகாதார அமைச்சினால் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் அஸாத் எம் ஹனிபா தெரிவித்தார்.

தென்கிழக்கு பிராந்திய மக்களிடையே அதிகளவாக காணப்படும் தொற்றா நோய்களுள் இருதய நோய், மாரடைப்பு மற்றும் உயர் குருதியமுக்கம் காணப்படுகின்றன. இதனால் திடீர் மாரடைப்புகளால் இளவயது மரணங்கள் தினமும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கான முறையான சிகிச்சைகளை உடனடியாகவும் உயர்தரத்திலும் வழங்க இருதய விசேட வைத்திய நிபுணர் நெளஸாத் அலி இந்த புதிய நியமனம் கிழக்குப் பிராந்திய மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இருதய நோய்க்கான சிகிச்சையை விசேட வைத்திய நிபுணரால் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ளலாம் என அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் அஸாத் எம் ஹனிபா மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஏனைய சுகாதார நிறுவனத் தலைவர்கள், விசேட வைத்திய நிபுணர்கள் உட்பட வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :