பொலிஸ் நிலையங்களுக்கான புதிய பெயர் பலகைகள் நடும் திட்டம் முன்னெடுப்புபாறுக் ஷிஹான்-
பொலிஸ் நிலையங்களுக்கான புதிய பெயர் பலகைகள் நடும் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பொலிஸ் நிலையங்களுக்கான பெயர் பலகைகள் புதிதாக மாற்றப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நீண்ட காலமாக சேதமடைந்து காணப்பட்ட கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் போன்றவற்றுக்கான புதிய பெயர் பலகைகள் இன்று புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

குறித்த நடவடிக்கையினை கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் ஆகியோர் பார்வையிட்டனர்.

மேலும் கல்முனை பிராந்தியத்தில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல பகுதிகளிலும் குற்றச்செயல்கள் குறைந்துள்ளதுடன் பொலிஸாரும் பொதுமக்களுடன் சிநேகபூர்வமாக தொடர்புகளை மேற்கொண்டு குற்றச்செயல்களை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :