நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மதிப்பளிக்க வேண்டும்.-மஹ்திஹஸ்பர்-
நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தொழில் பட வேண்டும் என கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம். எம். மஹ்தி தெரிவித்துள்ளார்.

இன்று (17) அவரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

தொடர்ந்தும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

நாடும் நாட்டு மக்களும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக காரணமான எவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப் பட்டாலும் போராட்டங்கள் ஓயப் போவதில்லை.
போராட்டக்காரர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாற்றமாக ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தால் அத் தெரிவுக்கு துணை நிற்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டக்காரர்களினதும் நாட்டு மக்களினதும் மன உளைச்சலுக்கு உள்ளாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்..

எனவே இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் பேரழிவுகளில் இருந்தும் உயிரிழப்புகளிலிருந்தும் பாதுகாப்பதாக இருந்தால் போராட்டக்காரர்களினதும் மக்களினதும் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கும் ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் எனவும் உருக்காமாக கேட்டுக்கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :